அடுத்தாண்டின் ஆரம்பத்தில் பொதுத் தேர்தல்:வருட இறுதிக்குள் பதவி நீக்கப்படும் ரணில்
2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம்.
நாடாளுமன்றத்தை கலைக்க போகும் ஜனாதிபதி
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். இதனையடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தை கலைத்து புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
எனினும் தற்போதைய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகும் வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
பதவி நீக்கப்படும் ரணில்
இதனிடையே நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் மீண்டும் அரசாங்கத்தை கைப்பற்ற பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகவும் பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, பொதுஜன பெரமுனவின் தனி அரசாங்கத்தை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.