சர்வகட்சி மாநாட்டில் மொட்டுக் கட்சி பங்கேற்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26.07.2023) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று (26.07.2023) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு
இதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam