மொட்டுக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ள குப்பைகள்: இந்திக்க அனுருத்த சாடல்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்த குப்பைகள் வெளியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கட்சியில் தூய்மையானவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு
மொட்டு கட்சியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கச் சென்றவர்களை சாடும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் இளைஞர், யுவதிகள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு காத்திருப்பதாகதெரிவித்துள்ளார்.
வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாற்பது வயதுக்கும் குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும், இந்த தடவை அந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் இந்திக்க அனுருத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
