ரணிலின் தீர்மானத்தின் பின்னணியில் கோட்டாபய!மொட்டுக் கட்சிக்கு தெரிந்த ரகசியம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில உண்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு சொந்த காரணங்கள் உண்டு
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் தொடர்ந்து செல்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.இது எங்கள் கோரிக்கை செல்லாதது என அர்த்தமல்ல.
தற்போதைய அமைச்சரவையில் தொடர்வதற்கு ஜனாதிபதிக்கு சொந்த காரணங்கள் இருக்கின்றன.

நாட்டில் பாரிய சீர்குலைவு ஏற்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புரிந்துகொள்கின்றது.அது இன்னொரு எதிர்ப்பு அலைக்கு செல்ல முடியாது.
புதிய அமைச்சரவைக்கான எமது உண்மையான கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், தற்போதைய நிலைமை மற்றும் ஜனாதிபதியின் தீர்மானங்களின் பின்னணியிலுள்ள காரணத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam