கோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடர தீர்மானித்தால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப்பட்டியல் ஆசனமொன்று வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடரும் எண்ணம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அறம்பேபொல, முன்னாள் ஜனாதிபதிக்கு தனது ஆசனத்தை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், இந்த விவகாரம் இன்னும் முறையாக விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட பொது மக்கள்
முன்னாள் ஜனாதிபதியை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, அரசியலில் தனது எதிர்காலம் தொடர்பில் எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து வெளியேறிய நிலையில் கடந்த 3ம் திகதி அதிகாலை நாடு திரும்பினார்.
கொழும்பில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து, கோட்டாபய ராஜபக்ச ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எவ்வாறாயினும், நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதியை வரவேற்பதற்காக அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
