கோட்டாபய மிகவும் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிகளில் ஒருவர் : அனுராத ஜயரத்ன
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டமைப்பான 'உத்தர லங்கா சபை'யை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த ஜயரத்ன,
மீண்டும் அரசியலுக்குள் வருவரா கோட்டாபய
“தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி எவருக்கும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வருவார் என தாம் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிகளில் ஒருவர்
எவ்வாறாயினும், அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்றபோதும், முன்னாள் ஜனாதிபதி கோடடாபய ராஜபக்ச இலங்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிகளில் ஒருவர் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே நாம் அவரை அடுத்த தலைமுறையினருடன் தொடர்பில் இருக்க வேண்டும், இதன்போதே
அவர் தனது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று அவர்
தெரிவித்துள்ளார்.