மகிந்தவை விசாரணைக்கு அழைத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு! (Video)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரை எதிர்வரும் புதன்கிழமை வாக்குமூலம் வழங்க வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மே 9 வன்முறை
மே மாதம் 9 ஆம் திகதி கோட்டகோகம மற்றும் மைனகோகமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவை தவிர்ந்த நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதன்கிழமை வாக்குமூலம் வழங்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி
இதேவேளை எவன்ட் கார்ட் குழுமத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளையதினம் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பங்கேற்குமாறு கைதிகள் குழுவொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் அவர் ஆணைக்குழுவில் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
அத்துடன் பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
