ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரச்சார பொதுக் கூட்டம் இரத்து
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆரம்ப பிரச்சார பொதுக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து இந்த பிரச்சார பொதுக் கூட்டம் இன்றைய தினம் அனுராதபுரத்தில் நடைபெறவிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்படும் தேர்தல் பிரச்சார கூட்டம்
கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி கூட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகளை விடவும் பாரியளவிலான மக்கள் கூட்டத்துடன் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.



