மொட்டு கட்சியின் உதவியுடன் ரணில் ஜனாதியாக நியமிக்கப்பட்டமைக்கு காரணம் இதுவே! சாகர காரியவசம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கான நோக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விளக்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தம்பதெனிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் வேறு முயற்சிகளுக்கு ஆதரவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உதவியுடன் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அவரின் வேறு எந்த முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க உடன்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
