அச்சுறுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துவரும் பொதுஜன பெரமுன : சாணக்கியன் குற்றச்சாட்டு
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அச்சுறுத்தும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து பல்கழைக்கழகம் சென்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கான நிதியுதவி வழங்கள் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) மாலை நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டுகள்
மேலும், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை மடியில் வைத்துக்கொண்டிருப்பாரானால் ஜனாதிபதி அவரின் செல்வாக்கினை இழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி நகர தலைவர் அ.கந்தவேள், வளைகுடா வானாம் பாடிகள் அமைப்பின் தலைவர் கர்ணன் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்கழைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam