இலங்கையில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி
இலங்கையில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இவ்வாறு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியில் வளர்ச்சி
இது தொடர்பில் குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்
கடந்த பெப்ரவரி மாதம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.17 சதவீத வளர்ச்சியாகும்.
அதேநேரம் 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செயல்திறன் 1.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.95 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதுடன் 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 1.96 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் கடந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதி துறையில் 0.30 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
