வட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி தரப்பு
வட் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அறிவிக்கின்றோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் கருத்து
வட் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
எனினும், மன்றில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்த பின்னணியில், இன்று நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள வட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டமூலத்தக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam