திடீர் திடீர் என்று அன்று அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை: கோட்டாபய தரப்பு மைத்திரி பதிலடி
இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி மலரும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
தனி நபரால் நாட்டை நிர்வகிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் இணைந்தால்கூட, மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்கள் வெற்றியளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கொழும்பில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி தோல்வியைத் தழுவியது. எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே அன்று இருந்தனர்.
அதன்பின்னர் கட்சி மீண்டெழுந்தது. தற்போது 14 உறுப்பினர்கள் இருக்கின்றோம். 1977ஐ விட சிறந்த நிலையில் உள்ளோம். எனவே, இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையில் எதிர்காலத்தில் ஆட்சி மலரும்.
நல்லாட்சியின்போது பல திட்டங்களை முன்னெடுத்தோம். சேவைகளை செய்தோம். தற்போதுபோல் அமைச்சுகளின் செயலாளர்கள் பதவி விலகவில்லை. விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக அமைச்சுப் பதவிகள் அன்று பறிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam