மீண்டும் கை சின்னத்தில் போட்டியிட கோரும் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள்
ஏதிர்வரும் தேர்தல்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 'கை' சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று அதன் அமைப்பாளர்கள் உறுதியாக வாதிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல பிரிவுகளாகப் செயற்பட்டு வருகிறன.
'கை' சின்னம்
இந்தநிலையில், ஒரு குழு 'நாற்காலி' சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகையில், மற்றொரு குழு 'கை' சின்னத்தை பயன்படுத்துவதை வலுவாக ஆதரிக்கிறது.

முன்னதாக கை சின்னம் தொடர்பில் உறுதியான நிலைப்பாடு, பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்டிருந்தாலும், கட்சித் தலைமை மற்றும் நியமிக்கப்பட்ட செயலாளர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் அதை செயல்படுத்துவதைத் தடுத்து வந்துள்ளன.
எனினும் நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால், எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 'கை' சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான அமைப்பாளர்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam