ரணில் தரப்புடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டுவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
துமிந்த திஸாநாயக்கவின் கருத்துப்படி,
சுதந்திரக் கட்சி
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனிக் கட்சியாக மாறியுள்ளது.
உள்ளூராட்சி சபை அல்லது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவே எமது தரப்பினர் போட்டியிடுவார்கள்.
சுதந்திரக் கட்சிக்கும், புதிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |