சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு வேட்பாளர் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை இன்று (31.07.2024) அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று (30) அறிவித்திருந்தார்.
கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இறுதித் தீர்மான
மேலும் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, கூடி பெரும்பான்மையின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவும் கலந்துககொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
