அறுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொடிகள் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (Photos)
கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரிடம் முறைப்பாடு
நேற்று புதன்கிழமை (22.11.2023) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கொடிகள் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரான செ.மயூரன், பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு கொடிகளை கட்டி விட்டுச் சென்றிருந்த நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், அந்த இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் இது தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் எனவும் மயூரன் தலைமையிலான குழுவினரால் பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 5 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
