பயங்கரவாத தடைச்சட்டத்தில் இன்னும் கடுமையான விதிகள் - சர்வதேசம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!(photos)
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்களில், கடுமையான விதிகள் அகற்றப்படவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பதற்காக இந்த திருத்தங்களை இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
எனினும் இந்த திருத்தங்களை முற்றாக நிராகரித்துள்ள சர்வதேச அறங்கூறுநர் சபை, பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமைகள் விடயத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட துடிப்பதாக சர்வதேச அறங்கூறுநர் சபையின் சட்டக்கொள்கை பணிப்பாளர் இயன் சீட்ர்மேன் குற்றம் சுமத்தியிருந்தார்.
(“The Government of Sri Lanka is once again scrambling to do its bare minimum ahead of another UN Human Rights Council session, in an attempt to deflect focus away from its failing human rights record,” said Ian Seiderman, ICJ’s Legal and Policy Director)
இந்தநிலையில் தமது கருத்தை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர், சட்டத்தின் காலக்கெடுவையும் மீறி, சந்தேகத்துக்குரியவர்கள், காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளபோது, விசாரணையை தொடர்ந்தும் அனுமதிப்பது அநீதிகளுக்கு வழியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்குமூலங்கள் சில சமயங்களில் நீதிவான்களாலும், காவல்துறையின் உயரதிகாரியாலும் பெறப்பட்டாலும், சந்தேகத்துக்குரியவர்களின் உடல் பாதுகாப்பு, காவல்துறையின் பிரத்யேக கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இது காவல்துறையினர் எதிர்பார்த்தப்படி, சந்தேகத்துக்குரியவர்களின் சாட்சியங்கள் அமையாதுபோனால், தொடர்ந்தும் அவர்கள் காவல்துறையினரால் பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தத்தின்படி, மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், விசாரணைகயை ஆரம்பிக்கவில்லை என்றால், சந்தேகத்துக்குரியவர்களுக்கு பிணை வழங்கமுடியும்.
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய அதிகாரங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால், முன்மொழியப்பட்ட சட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினருக்கு எதிராக, தொடர்ந்து ஆயுதமாக்குவதாக இருந்தால்,அது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் எதிர்ப்புக்களை உருவாக்கும்.
அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு இடம்தரப்படாது என்று அண்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கும் முரண்பட்டதாக அமையும் என்று சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார்.




