இலங்கையின் விமானப்படைக்குள் சேர்க்கப்படும் அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் விமானங்கள்!
இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து எட்டு பெல்-206 உலங்கு வானூர்திகளையும், பாகிஸ்தானிலிருந்து ஒரு FT-7 பயிற்சி விமானத்தையும் இலங்கை விமானப்படை பெற்றுகொள்ளவுள்ளது.
இதனைக்கொண்டு, இலங்கை விமானப்படை தனது திறன்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா எட்டு உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு வழங்கும் என்று விமானப்படைத் தளபதி ஏர் மார்சல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இவை வழங்கப்படவுள்ளன.
அத்துடன், பாகிஸ்தானுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் FT-7 பயிற்சி விமானம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது விமானப்படைக்குள் சேர்க்கப்படும் என்றும் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள்
முன்னதாக, கடந்த செப்டம்பரில், அமெரிக்காவிலிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ER விமானத்தையும், டிசம்பரில் அவுஸ்திரேலியாவிலிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானத்தையும் இலங்கை விமானப்படை பெற்றது.
இந்த விமானங்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் திறன்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அப்பால், இலங்கை விமானப்படை அதன் கிஃபிர் போர் விமானங்களை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ_டன்; கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிடம் உள்ள ஐந்து கிஃபிர் ஜெட் விமானங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.