மலையக மக்களுக்காக செயற்படுத்தப்படும் புரட்சிகர திட்டங்கள்: ஜீவன் தொண்டமான்
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் கடந்து வந்த வலி சுமந்த வரலாற்றை மாற்றியமைக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரட்சிகரமான திட்டங்களை செயற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் செயற்படுத்தவம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச பொதுச்சேவைகள் மாநாட்டில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை ரீதியிலான மாற்றங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கமானது கடந்த காலங்களில் கொள்கை ரீதியிலான மாற்றங்களின் போது பன்முகத்தன்மை பற்றி சிந்திக்கவில்லை.
2022இல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமைக்கு இதுவும் காரணமாகும். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் பக்கம் நின்று தேவையான ஆலோசனைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்தோம்.
இதன்படி பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன், தொழிலாளர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் உள்ள தொழில் துறைகளில் பெருந்தோட்ட தொழில்துறை முன்னோடியானது - முதன்மையானது. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அத்துறையில் வேலை செய்கின்றனர். அதேபோல 15 இலட்சம் வரை மலையகத் தமிழர்கள் உள்ளனர்.
வலிசுமந்த பயணம்
1948இல் குடியுரிமை பறிக்கப்பட்டது, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பாதிபேர் நாடு கடத்தப்பட்டனர், உள்நாட்டு கலவரங்கள், போர் என எல்லாவற்றிலும் எமது மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் தான் எமது சொந்தங்களின் வாழ்வு வலிசுமந்த பயணம் என குறிப்பிடுகின்றேன்.
அம்மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக எம்மால் முடிந்தவற்றை செய்துள்ளோம். தற்போது காணி உரிமை மற்றும் வீட்டு உரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தொழில்துறைசார் சட்டங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவை உரிய வகையில் உள்வாங்கப்படவில்லை. திருத்தி அமைக்குமாறு கோரியுள்ளோம்.
இனம், மதம், மொழிக்கு அப்பால் மனிதத்தை விரும்பும் இளைஞர் குழுவாக செயற்பட்டால் நாட்டையும், உலகையும் மாற்றலாம். இதில் அனைத்து தொழில் துறைகளும் இணைய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 மணி நேரம் முன்

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
