இலங்கை அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் நீக்கம்
உலக கிண்ண தொடரின் அடுத்து நடக்கவிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தசுன் சானக்க உபாதைக்கு உள்ளாகிய நிலையில் அவருக்கு பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்ன அணியில் இணைத்துக்கொள்ளபப்பட உள்ளார்.
மூன்று வாரங்களுக்கு இல்லை
இந்நிலையில் சாமிக்க கருணாரத்னவை அணியில் இணைத்து கொள்வற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கட் பேரவயைின் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளது.
உபாதை காரணமாக லக்னோவில் இன்று நடைபெற்ற பயிற்சியிலும் தசுன் ஷானக மற்றும் மதீஷாவும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உபாதை காரணமாக தசுன் ஷானகவால் மூன்று வாரங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய தசுன் சானக்க உலகக் கிண்ண குழாமிருந்து விலகி நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.
மேலும், எஞ்சிய போட்டிகளில் இலங்கை அணியை குசால் மெண்டிஸ் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri