தரவரிசையில் முதலிடம்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இந்தியா
புதிய இணைப்பு
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் (15.10.2023) இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 192 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது வெற்றி பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றதுடன் முகமது ரிஸ்வான் 49 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணி
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இந்திய அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.
இப்போட்டி இன்று (14.10.2023) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளதுடன், இந்தியா அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.