பதும் நிஷங்கவின் சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த இலங்கை
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
382 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 339 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இந்நிலையில் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பதும் நிஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன், இதற்கு முன் அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவின் (189) சாதனையை பதும் நிஷங்க முறியடித்துள்ளார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, 139 பந்துகளை எதிர்கொண்ட இவர், 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அதேவேளை, இன்றைய போட்டியில், இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியானது, கண்டி, பல்லேகல விளையாட்டு அரங்கில் இன்றையதினம் (09.02.2024) நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று இருபதுக்கு20 போட்டிகளும், இடம்பெறவுள்ளன.
ஒருநாள் தொடர்
Sri Lanka announces ODI squad for the Afghanistan series! Can't wait for some thrilling cricket action! ????? #SLvAFG pic.twitter.com/LmgtBqcJdv
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 8, 2024
டெஸ்ட் போட்டியை வென்றது போல் ஒருநாள் தொடரையும் வெல்வதே அணியின் நோக்கம் என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இலங்கை ஏழாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
? STARTING XI ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 9, 2024
Here's our Starting XI for the first match of the three-match ODI series against Sri Lanka. ?
Go well, Atalano! ?#AfghanAtalan | #SLvAFG2024 pic.twitter.com/503fFVugd1
இரு அணிகளுக்குமிடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் 07இல் இலங்கை வெற்றி பெற்றுள்ளதுடன் ஆப்கானிஸ்தான் அணி 04 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |