அமெரிக்காவின் பொக்கிஷமாகும் இலங்கை! முக்கோண வடிவில் பெரும் ஆபத்து
சீனாவின் பட்டுப்பாதையாக திகழும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கையின் முக்கியத்துவம் மிக முக்கியமாக உணரப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலே, சீனாவின் முதலீடு உலகமெல்லாம் வியாபித்ததை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இலங்கை இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இந்த மூன்று நாட்டையும் எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பதில் தான் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,