மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி:ஐஎம்எப் எச்சரிக்கையை அம்பலப்படுத்திய திலித்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது நாடு பாரிய சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக IMFயை மேற்கோள்காட்டி இன்று நாடாளுமன்றத்தில் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கான காரணம்
தொடர்துரையாற்றிய அவர்,ரணில் விக்ரசிங்க இருக்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 285 ரூபாவில் இருந்தது.ஆனால் இன்று 313 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதில் ஏற்பட்ட பொறுப்பு டொலர் பில்லியன்1140 ரூபா ஆகும்.அதாவது அதிகரித்துள்ள தொகையாகும்.ரணில் விக்ரசிங்க செல்லும் போது வெளிநாட்டு கையிருப்பு 800 டொலர் பில்லியன் ரூபாவாகும்.
இன்று வெளிநாட்டு கையிருப்பு 1.2 டிரிலியன் வரை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையால் நாம் இருந்த இடத்தில் இருந்தும் கீழே வீழ்ந்துள்ளோம்.

அத்தோடு அனர்த்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்காக 500 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடவுள்ளது.இதன் காரணமாக நாம் இருக்கும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பொருளாதாரத்தின் உண்மையான கள நிரவத்தை மக்களுக்கு மறைப்பதை விடுத்து தெளிவுபடுத்த வேண்டும்.இன்னும் அரசாங்கம் புள்ளிவிபரங்களை காட்டி ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.