இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கையில் அடுத்த வருடம் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத விடுமுறை
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பாடசாலைகளில் டிசம்பர் 2ஆம் திகதி முடிவடையும்.
அதேவேளை மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் டிசம்பர் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜனவரி 10ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 11 மணி நேரம் முன்
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri