இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் கடுமையான கவலை
தமது நடவடிக்கைகளுக்கான ஊழியர்களின் கடுமையான பற்றாக்குறை, ஆட்சேர்ப்பில் தாமதம் மற்றும் அண்மைய ஊடகச் செய்திகளின் பிழையான அறிக்கைகள் ஆகியவை அதன் செயல்பாடுகளைப் பலவீனப்படுத்துவதாகக் கூறி இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
உலகிலேயே வலுவான வெளிப்படைத்தன்மைச் சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் 2016 இன் இல. 12 தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடிமக்கள் தகவல்களை அணுகுவதற்கு இந்தச் சட்டம் ஆற்றிய முக்கிய பங்கினை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அங்கீகாரங்கள்
அத்துடன் சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றதையும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், தொடர்ச்சியான அரசாங்கங்கள் அதன் செயல்பாட்டு மற்றும் நிதிச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டபூர்வமான பாதுகாப்புகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆணைக்குழு ஒரு தனி நிதியமின்றி இயங்கி வருகிறதுடன், வழக்குகள் அதிகரித்தபோதிலும் ஒரு சட்ட அதிகாரி மற்றும் சில உதவியாளர்களைக் கொண்ட மிகக் குறைந்த ஊழியர்களைக் கொண்டே செயல்படுகிறது.
நிதிச் சுதந்திரம்
கூடுதல் ஊழியர்கள் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆதரவு உள்ளிட்ட அத்தியாவசியப் பதவிகளுக்கான கோரிக்கைகள் பல மாதங்களாகப் பதிலளிக்கப்படாமல் உள்ளதாகவும், அதன் வரவுசெலவுத் திட்டம் அமைச்சின் கீழ் உறிஞ்சப்பட்டதால் நிதிச் சுதந்திரம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
இறுதியாக, குடிமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பலவீனப்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பின் 14A பிரிவை சிறுமைப்படுத்த செய்யும் என்றும், நாட்டின் முன்னேற்றத்தை மாற்றியமைக்கும் என்றும் ஆணைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |