இலங்கையில் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி
இலங்கையில் பொலிஸார் கையடக்க தொலைபேசிக்கான புதிய செயலியொன்றை (App) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
‘etraffic’ என்ற செயலியே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை Android பயனர்கள் Google Playstore இலிருந்து தரவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அன்றாடம் சந்திக்கும் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து குறித்த செயலி மூலம் நேரடியாக பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள - https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice





