நாளொன்றுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பு!மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்,மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியதையடுத்து, களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை மாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,மூன்று நாட்களுக்கு தேவையான கையிருப்பு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், அறியப்படாத காரணங்களால் களனிதிஸ்ஸ ஆலைக்கான எரிபொருள் விநியோகத்தை CPC இடைநிறுத்தியுள்ளது.
நாளொன்றுக்கு 40 மில்லியன் ரூபா
நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு மின் உற்பத்தி வழங்கப்பட்டுள்ளதுடன் நாளொன்றுக்கு 40 மில்லியன் ரூபா செலவாகின்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்கள் ஏன் மின்சார உற்பத்தியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளன.
நாட்டிற்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்துவதற்கு அமைச்சர் ஏன் முக்கிய காரணம் என்ற கேள்வி எழுகிறது.
இதேவேளை, 12 நிலக்கரி ஏற்றுமதிகள் மாத்திரமே நாட்டை வந்தடைந்துள்ளதுடன், 12ஆவது கப்பலை இறக்குவது நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது.
அதிக மின்தடைகள்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த ஏற்றுமதிகளுக்கான கொடுப்பனவுகளைப் வழங்க தவறியதால், அடுத்த சில மாதங்களில் நாட்டின் மின் உற்பத்தி திறன்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
எங்களுக்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன, அமைச்சர் இதைப் பற்றி அறியவில்லை என நினைக்கின்றேன்.
கடந்த காலங்களில் எனது அறிக்கைகளுக்காக நான் விமர்சிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இந்த சரக்குகளை இறக்குவதில் அதிக தாமதங்களை எதிர்கொள்கிறோம், ஜூலை மாதத்தில் அதிக மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.”என கூறியுள்ளார்.