அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி நிலை!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்கவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த வாக்கெடுப்பு அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
காரணம், அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
ஆளும் கட்சிக்கு சுமார் 120 ஆசனங்கள் காணப்படும் நிலையில், இந்த 10 உறுப்பினர்களும் அமர்வுகளில் பங்கேற்கத் தவறினால் ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 110 ஆக குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் சூழ்நிலைில் அரசாங்கத்தினால் 113 பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றில் காண்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொட்டு கட்சி
இதேவேளை, மொட்டு கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனக்க ரட்நாயக்கவை பதவியிலிருந்து நீக்கும் யோசனை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பு அரசாங்கத்திற்கு பெரும் பலப்பரீட்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 3 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
