கடற்படை அதிகாரிகளின் பதவி விலகல் தொடர்பான செய்திக்கு மறுப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து கடற்படை அதிகாரிகள் இருவர் பதவி விலகியதாக வெளியான சில சமூக ஊடக செய்திகளை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
ஜனித் ராஜகருணா மற்றும் மல்ஷான் பிரதாபசிங்க ஆகிய இரண்டு கடற்படை அதிகாரிகளும் "கோட்ட கோ கம" கொடூர தாக்குதலை கண்டு இலங்கை கடற்படையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படையினரின் மறுப்பு
இந்த செய்திகளை கடற்படை மறுத்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபடி இலங்கை கடற்படையின் எந்த அதிகாரியும் பதவி விலகவில்லை என்றும் கூறியுள்ளது.
பதவி விலகியதாக குறிப்பிடப்படும் ஒருவர் மாத்தறையை சேர்ந்தவர் எனவும், கடற்படையிலிருந்து தப்பியோடியவர் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை! காணொளிகள் மூலம் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் |