சீனாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை நிராகரித்த யாழ். பல்கலைக்கழகம்
சீனாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மறுத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
வளமான தமது நிலங்கள் அபகரிக்கப்படலாம் என்ற மறைகரமான நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான சந்தேகம் காரணமாகவே, சீனாவின் விவசாய பல்கலைக்கழகத்துடனான இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கூறியுள்ளதாக அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு
கடந்த நவம்பர் 25ஆம் திகதியன்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் அதில் கையெழுத்திட துணைவேந்தர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா மறுத்துள்ளார்.
இதேவேளை இந்த விடயத்தில் துணைவேந்தரின் செயற்பாட்டை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வரவேற்றுள்ளது. சீனாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள முயற்சிப்பதாக அந்த ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் மக்களின் நலன்கருதி இதனை முன்னெடுக்கவேண்டாம் என்று ஒன்றியம், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஏற்கனவே சீனா கடல் வெள்ளரி என்ற போர்வையில் வடக்கின் கடற்பகுதியை அபகரி;த்துள்ளது.
சேதனைப்பசளை
இதன்மூலம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தற்போது இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு உடன்படிக்கையாக இதனை காட்டுகிறது. எனினும் இது வளமான வடக்கின் நிலங்களை அபகரிக்கும் திட்டமாகவே கருதவேண்டியுள்ளது.
ஏற்கனவே விவசாயத்துக்கு தீங்கை ஏற்படுத்தும் சேதனைப்பசளையை இலங்கைக்கு
அனுப்பியதன் மூலம், இலங்கை பல மில்லியன் டொலர்களை சீனாவுக்கு செலுத்தியதையும்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
