சுற்றுலாப் பயணிகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை! ஜனாதிபதி தெரிவிப்பு (Photos)
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டதனால், வெளிநாட்டு நன்கொடைகள் கிடைப்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது இந்நிலையில், வைத்தியசாலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் நாம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
”பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சுகாதாரத் துறை
பதுளை மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக மஹியங்கனை பிரதேச வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அதேபோன்று, கிராதுருக்கோட்டையில் உள்ள சிறுநீரக மருத்துவமனையின் செலவுக்காக நிதியைஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தியத்தலாவை ஆதார வைத்தியசாலை காரணமாக பண்டாரவளை வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் நாம் ஆராய்வோம்.
பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கான பணிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
பதுளை பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு அவசியமான அனைத்து காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டதனால், வெளிநாட்டு நன்கொடைகள் கிடைப்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பதுளை பொது வைத்தியசாலைக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றக்கொள்வதற்கு அவசியமான பணத்தை வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்படலாம்.
மேலும் இந்த வைத்தியசாலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் நாம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் விடுபட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இங்கு கருத்து தெரிவித்தார்.
மாவட்ட நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இடது கரையின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அங்கு சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ, மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, தேனுக விதானகமகே, அரவிந்த குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் மாவட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
