புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பை பெற இலங்கை அரசாங்கத்திற்கு அருட்தந்தை சத்திவேல் வழங்கும் ஆலோசனை

Rajiv Gandhi Sri Lanka Government Of Sri Lanka Government Of India
By Shan Nov 12, 2022 04:49 AM GMT
Report

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12.11.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்று பாராட்டுகின்றது.

இவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்ட தமிழக அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது.

புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பை பெற இலங்கை அரசாங்கத்திற்கு அருட்தந்தை சத்திவேல் வழங்கும் ஆலோசனை | Sl Government Should Release Political Prisoner

இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாக கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12,000 முன்னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்நடத்தையாளர்களாக அடையாளம் காணப்பட்டு இவர்கள் சமூகமயமாக்கப்பட்டனர்.

தொடர்ந்து அரசியல் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்வதற்காக முயற்சித்தவர் என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி காலத்திலும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 16 பேர் விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் சிலருக்கு விடுதலைக்கு அனுமதி அளித்திருந்தார். இதற்கு இவர்களின் நன்நடத்தையும் ஒரு காரணமாகும்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட காலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு காலகட்டத்திலும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராகவோ, அரசாங்கத்திற்கு எதிராகவோ எதனையும் செய்யவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை

நன்னடத்தை மிக்கவர்களாகவே காணப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு முன் அறிவிப்பு செய்தே பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலை பொருட்களுக்கோ அல்லது வேறு எதற்குமோ எந்த விதமான சேதங்களையும் ஏற்படுத்தாது அமைதி போராட்டங்களையே நடத்தியுள்ளனர். இப்ப போராட்ட காலத்தில் சிறந்த ஒழுக்க நெறியை கடைப்பிடித்துள்ளனர்.

தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற்றவர்களாகவே உள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் ஒப்புதல் வாக்கு மூலமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களாக உள்ளனர்.

புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பை பெற இலங்கை அரசாங்கத்திற்கு அருட்தந்தை சத்திவேல் வழங்கும் ஆலோசனை | Sl Government Should Release Political Prisoner

இதனை கருத்தில் கொண்டும், தமிழக அரசாங்கத்தை போன்று தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்கு செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்நடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட அரசாங்கம் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயலும் அரசாங்கம் அம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றானதும் அரசியல் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட்டதுமான அரசியல் கைதிகளில் விடுதலை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

அதுவே அரசின் மீதான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் இந் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் இவ்வேளையில் அதற்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துணை செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US