தரமற்ற மருந்துகள் தொடர்பான தகவல் : அரசாங்கம் அளித்துள்ள விளக்கம்
அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் தரமற்ற மருந்துகள் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்
தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர், " தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.
குறித்த அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
