90 நாட்களின் பின்னர் இலங்கைக்கு மீண்டும் காத்திருக்கும் ஆபத்து
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த 90 நாள் வரி இடைநிறுத்தம் முடிவடைந்த பின்னர், அமெரிக்காவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள், குறித்த வரிகளால் பாதிக்கப்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உள்ளூர் சந்தையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு இன்னும் குறிப்பிடத்தக்க தேவை இருப்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் வரி
புத்தாண்டு பருவத்தின்போது, உள்ளூர் சந்தையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு இன்னும் குறிப்பிடத்தக்க தேவை உள்ளதை அவதானிக்க முடிந்ததாக சந்தை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய தரம், மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் மூலம், இலங்கையை ஒரு ஆடை சந்தை மையமாக மாற முடியும் என்று ஆடைத்தொழில் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்தையை அவர்களுக்கும் விரிவாக்க முடியும் என்றும் சந்தைத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
