இலங்கையில் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வு
சீனா (China) தனது வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி இலங்கையில் (Sri Lanka) ஒன்று அல்லது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை உருவாக்கி இயக்கி வருகிறது.
சுத்திகரிப்பு ஆலை
இலங்கை நாளொன்றுக்கு சுமார் 38,000 பீப்பாய்கள் பதப்படுத்தும் திறன் கொண்ட1960களில் ஈரான் நாட்டினால் அமைக்கப்பட்ட ஒரே ஒரு சுத்திகரிப்பு ஆலையை கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் எரிசக்தி ஆற்றலை அதிகரிக்க போட்டியிடுகின்றன.
சீனாவினால் நடத்தப்படும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 160,000 பீப்பாய் பதப்படுத்தும் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதா? அல்லது இரண்டு 100,000 பீப்பாய் பதப்படுத்தும் திறன் கொண்ட வசதிகளை உருவாக்குவதா என்பது குறித்த அதன் சாத்தியக்கூறு ஆய்வை சினோபெக் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுத்திகரிப்புத் திட்டம் என்பது சீன மற்றும் உலகளாவிய சுத்திகரிப்பு நிறுவனத்தால் வெளிநாடுகளில் அதிக சந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
இலங்கையில் சினோபெக்கின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாட்டில் அந்த சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான முதல் சுத்திகரிப்பு ஆலையாக அது மாற்றமடையும்.இந்தநிலையில் சினோபெக் மற்றும் சீனா, இந்தியாவுடன் போட்டியிட வேண்டும்.
கூட்டு முயற்சி
எனவே, அது இலங்கையுடனான அதன் ஆற்றல் உறவுகள் மற்றும் உட்கட்டமைப்பு இணைப்புகளை அதிகரிப்பதில் பார்வையை செலுத்தி வருகிறது.
முன்னதாகவே இலங்கையின் எரிசக்தி அமைச்சர் விஜேசேகர (Kanchana Wijesekera), இலங்கையின் கிழக்கில் உள்ள திருகோணமலை எரிபொருள் தொட்டிப் பண்ணையுடன் இந்தியாவில் உள்ள நாகப்பட்டினத்தை இணைப்பது குறித்து இந்திய நிறுவன நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளார்.
கூடிய விரைவில் சாத்தியமான குழாய்வழிக்கான உத்தியோகபூர்வ ஏற்பாடு அல்லது உடன்படிக்கையை உருவாக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டமிடப்பட்ட சோலார் பார்க், சம்பூர் கிரவுண்ட் மவுண்ட் சோலார் திட்டம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளின் கட்டுமானத்திலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
திட்டம் முன்மொழிவு நிலைக்கு முன்னேறியுள்ளது, மேலும் மதிப்பீடு செய்யப்பட்டவுடன் 120 மெகாவாட் சோலார் பூங்காவில் 50 மெகாவாட் முதல் கட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |