இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும்! மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா அவர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆதரவு
கடன்களை மறுசீரமைக்கும் நாட்டின் முயற்சிக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகளுக்கு உதவும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சீனா, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும் என அமெரிக்க
திறைசேரி செயலாளரும் கோரிக்கை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.