7499 இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
73வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பல்வேறு நிலைகளில் இருந்து ஏறக்குறைய 7499 இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பதவி உயர்வுகள்
இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பனாகொட இராணுவ முகாமில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
73 வது இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே விடுத்துள்ள செய்தியில்,
“தேசிய பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல்களை இனங்கண்டு, நாட்டில் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதும், எமது ஒற்றுமையையும் பாதுகாப்பதும் இலங்கை இராணுவத்தின் பிரதான பொறுப்பாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் சமாளிக்க உதவும். ஒழுங்கமைப்பைத் தவிர்த்து, அமைப்பின் இலக்குகளை அடையவும், தேசத்தின் சிறந்த நலன்களுக்குச் சேவை செய்யவும் உங்கள் கடமைகளை திறம்படச் செய்ய உங்களை ஊக்குவிக்கிறேன்" என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
