மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு செல்ல தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்
இலங்கை விமானப்படையின் 20 அதிகாரிகள் மற்றும் 88 விமானப்படை வீரர்கள் அடங்கிய விமானப் பிரிவின் மற்றொரு குழு, அமைதி காக்கும் பணிகளுக்காக டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட உள்ளது.
இலங்கை விமானப்படை 2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேசிய திறைசேரிக்கு பெற்றுகொடுக்கின்றது.
இதன்படி மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணிக்காக (MINUSCA) நியமிக்கப்பட்ட விமானப் பிரிவின் எண் 10 குழுவின் பாஸிங் அவுட் அணிவகுப்பு கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
விமானப்படைத் தளபதி
10ஆவது படைத் தளபதி குரூப் கப்டன் உதித டி சில்வா தலைமையில் இடம்பெற்ற அணிவகுப்பிற்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச மரியாதை செலுத்தினார்.
மேலும், அணிவகுப்பு உரையின் போது, மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நிலைகொண்டுள்ள இலங்கை விமானப்படையினரின் துணிச்சல், நிபுணத்துவம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பாராட்டியதாக தளபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இராணுவப் படைகள் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்றும், இது உலக அரங்கில் தேசத்தின் நிலையை மேம்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பணி நாட்டிற்கு கணிசமான பொருளாதார நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
