கொழும்பில் வெளிநாட்டவர் உள்ளிட்ட நால்வர் கைது
சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள 59 போதைப்பொருள் வில்லைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
தெற்கு அதிவேக வீதியில் மேற்கொண்ட சோதனையில் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்த கார்
இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த காருக்குள் இருந்து 19 கொக்கெய்ன் வில்லைகள் (277 கிராம்) அடங்கிய பொதி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, தல்பே பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேகளே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளை அடுத்து, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டு நாட்டவர் ஒருவரினால் குறித்த போதைப்பொருள் சந்தேக நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
500 அமெரிக்க டொலர்கள்
இதனையடுத்து 52 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்ட சியரா லியோனிய(Sierra Leone) நாட்டவர், பொரளையில் வைத்து 672 கிராம் எடையுள்ள 40 கொக்கெய்ன் வில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த 500 அமெரிக்க டொலர்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நாணயத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 4.7 கிராம் கொக்கெய்னுடன் பொரளையைச் சேர்ந்த 28 வயதுடைய மற்றொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸாரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |