நாட்டில் பரவி வரும் தொற்று நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் புதிதாக தோல் தொற்று நோய் ஒன்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தோல் நோய் தொடர்பான மருத்துவ நிபுணர்கள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டீனியா என பெயரிட்ப்பட்ட இந்த நோய் நிலைமையானது தற்பொழுது தொற்று நோயாக பரவியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய் பரவக்கூடிய அபாயம்
மேலும், சகல வயதினருக்கும் இந்த நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உடலின் எந்தவொரு பாகத்திலும் இந்த நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
வியர்வை அதிகளவில் படியக்கூடிய உடல் பகுதிகள் மற்றும் தலையில் இந்த நோய் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நோய் தொற்று பரவுகை குறித்து இலங்கையில் கண்டறியப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
