புலம்பெயர் மக்கள் விடயத்தில் புதிய சிக்கலை எதிர்கொள்ளும் கனடா
கனடாவில் உயர் கல்வி கற்ற மற்றும் திறமையான புலம்பெயர் மக்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் அங்கிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கனேடிய குடியுரிமை நிறுவனம் (ICC) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தி லீக்கி பக்கெட் 2025 என்ற தலைப்பில் செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஐந்தில் ஒரு குடியேறி நிரந்தர குடியிருப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 25 ஆண்டுகளுக்குள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஐ.சி.சி கண்டறிந்துள்ளது.
வெளியேறும் மக்கள்..
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் கனடா தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இவ்வாறானதொரு தகவல் சிக்கலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முனைவர் பட்டம் பெற்றவர்கள், இளங்கலை பட்டம் பெற்றவர்களை விட கனடாவை விட்டு இடம்பெயர இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
வருமான வளர்ச்சியை வழங்காத வேலை வாய்ப்புகளை புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும்போது அந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கிறது.
கனடாவின் இலக்கு
குடியேற்றம் குறித்த அதிகரித்து வரும் சந்தேகங்கள் திறமைகளைக் குறைப்பதற்கு வழிவகுக்கிறது என்றும், இது கனடாவின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு பதிலளிக்கும் திறனைப் பாதிக்கும் என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் பெர்ன்ஹார்ட் கூறுகிறார்.

அடுத்த பத்தாண்டுகளில் கனடா தனது அமெரிக்கா அல்லாத ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் மார்க் கார்னி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கனடா தனது வர்த்தகத்தை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், குடியேறிகளையும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளில் பணிபுரியும் அனுபவத்தையும் இழப்பது கனடாவை பாதிக்கும் என்று பெர்ன்ஹார்ட் கூறுகிறார்.