யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (16) மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்றும், மண்டையோடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம், அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், நேற்றைய இரண்டாம் நாள் அகழ்வின் போதே இந்த மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள்
முழுமையான என்புத்தொகுதி, மண்டையோடு என்பவற்றுக்கு மேலதிகமாக கை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் (17) முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், காணாமலாக்கப்பட்டோரைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகளும், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினரும் பிரசன்னமாகி இருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
