முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினை: ஈ.பி.டி.பி தரப்பின் கருத்து
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முள்ளிவாய்க்கால் அவலம் நினைவு கூறப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு இதே காலப் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அவலம் காரணமாக ஆயிரக்கணக்கான எமது மக்கள் உயிரிழந்திருந்தனர்.
எதிர்காலத்திற்கான படிப்பினைகள்
அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதும் அவர்களுக்கான பிரார்த்தனைகளை முன்னெடுப்பதும் யாராலும் விமர்சிக்கப்பட முடியாதது.
அதேபோன்று, அந்த பேரவலம் தொடர்பாக அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் என்பதற்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்வேறு இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள், எமது இனத்தின் எதிர்காலத்திற்கான படிப்பினைகளாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
