தேசிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை இல்லை: சுனில் வட்டகல சுட்டிக்காட்டு
ஜே.வி.பியினருக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாம் சிறப்பாகவே இணைந்து பயணித்து வருகின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "கடந்துள்ள 6 மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கிடையில் குழப்பம் ஏற்படும் எனப் பலர் கருதினர்.
வீண் விமர்சனங்கள்
அது தொடர்பில் கதைகளைப் பரப்பினார்கள். இன்றளவிலும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் தொடர்கின்றன. இந்தப் பதிவுகளை பார்க்கும்போது சிரிப்பு தான் வருகின்றது.
எமது குழுவினர் புரிந்துணர்வுடன் சிறப்பாகச் செயற்பட்டு தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, வீண் விமர்சனங்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
