கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
கல்கிஸ்ஸைப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 05ஆம் திகதி கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் வைத்து சுத்திகரிப்புத் தொழிலாளியாக கடமையாற்றிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கைது
குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளோட்டியை இன்று கல்கிஸ்ஸைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொட்டாவ, மாகும்புற பிரதேசத்தில் வைத்து கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |