பொதுமன்னிப்பில் விடுதலையான கைதிகள் பட்டியலை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி கடந்த மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட 388 கைதிகளின் முழுப் பட்டியலை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கைதிகளின் பரிந்துரை பட்டியல் மற்றும் அவர் அங்கீகரித்த உரிய பட்டியல் இரண்டும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் நிதி குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெற வேண்டும் எனவும் ஜனாதிபதி யார் யாருக்கெல்லாம் மன்னிப்பு வழங்க அங்கீகாரம் அளித்தார் என்பதை பற்றிய பொறுப்பும், மக்களுக்கு பதிலளிக்கும் கடமையும் இருக்க வேண்டும்,” என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam