அமைச்சர் லால்காந்தின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம்
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்த, உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் கூறியதாவது, "மிகிந்தலை தலைமை விகாராதிபதி மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பை பற்றி மிகிந்தலை தேரருக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் உள்ளது.
போர்க்கொடி
எனினும், மகா சங்கத்தினரைப் படுமோசமாக விமர்சிப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தனது கருத்தை மீளப்பெற வேண்டும். மிகிந்தலை தேரர் உட்பட மகா சங்கத்தினரிடம் அமைச்சர் லால்காந்த மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரத்துக்கு எதிராக அரசியல் களத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. சில பௌத்த தேரர்களும் அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.