கோட்டாவுடன் ஒத்துவராது! சஜித் தீர்மானம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை,சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி, இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தமது கட்சி இணையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்;.
இதனையடுத்தே சர்வகட்சி அமைச்சரவையில் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்; அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
